×

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக கூட்டணி வெற்றி

நாமகிரிப்பேட்டை, ஜன.3: நாமகிரிப்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினருக்கான தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணி நேற்று நாமகிரிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், 1வது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த சுசீலா பொன்னுசாமி 2339 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 1040 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் செளந்திரவள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார். 2வது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த சசிகலா 1889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 961 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் சீனிவாசன் இரண்டாம் இடம் பிடித்தார். 3வது வார்டில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக வேட்பாளர் ராணி 2760 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் செல்வாம்பிகை 1611 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 4வது வார்டில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் பெரியசாமி 3457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவைச் சேர்ந்த சாந்தப்பன் 464 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 5வது வார்டு அதிமுக வேட்பாளர் முருகேசன் 1979 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் திலகம் 1059 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

6வது வார்டு திமுக வேட்பாளர் கலாராணி, 1870 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சம்பூர்ணம் 1647 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 7வது வார்டு அதிமுக வேட்பாளர் பிரியா செல்லப்பன் 2,486 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். திமுகவைச் சேர்ந்த கலைச்செல்வி 1722 பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 8வது வார்டில் திமுகவைச் சேர்ந்த அங்கம்மாள் 1867 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவைச் சேர்ந்த மாதேஸ்வரி 1029 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 9வது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் 2117 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். திமுகவைச் சேர்ந்த சக்திவேல், 1889 வாக்கு பெற்று 2வது இடம் பெற்றார். நாமகிரிப்படே–்டை ஒன்றியத்தில் உள்ள 11 வார்டில், அதிமுக 7, பாமக, 2, திமுக 2 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 9 இடங்களை பிடித்துள்ளது. நாமகிரிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் பதவியானது மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், 9வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ராஜேந்திரன் மற்றும் 11வது வார்டில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி ஆகிய இருவரில் ஒருவர் சேர்மேனாக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 8வது வார்டில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் வடிவேலன் சுமார் 2,500 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags : AIADMK ,alliance ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி